Advertisement

Responsive Advertisement

சொந்த ஊருக்குள் அமோக வரவேற்புடன் சென்று தாயிடம் ஆசிபெற்ற பிள்ளையான்!

 


இன்றைய நாள் எனக்கு என்ன தான் மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும் எதிர்காலத்தில் என்னை நம்பியுள்ள மக்களுக்கு அதிகம் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் நேற்று மாலை அவரது சொந்த பிரதேசமான பேத்தாளைக்கு வருகை தந்து தனது தாயாரிடம் ஆசி பெற்று கட்சி ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்றைய நாள் எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாள் காரணம் என்னவென்றால் 1870 நாள் நான் சிறையில் இருந்தேன் அதிலும் அதிகமான நாட்கள் நான் தனிமையில் இருந்தேன் எனது மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தார்கள் அந்த மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஒரு காலகட்டத்தில் நான் இருக்கின்றேன்.

இன்றைய நாள் என்னதான் மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும் எதிர்காலத்தில் என்னை நம்பி நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மயிலம்கரைச்சை விகாரையின் விகாராதிபதி, கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments