விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலும் சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்த நீதவான், அவரது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நிபந்தனை விதித்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான 95 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments