Advertisement

Responsive Advertisement

மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 23ஆக உயர்வு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான, கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய அவைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் 11 ஆயிரத்து 335 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 249 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments