யட்டியாந்தோட்ட, இங்கிரியாவத்த பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் தந்தை இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை எம்பிலிபிட்டிய, உடவளவ பகுதியை சேர்ந்த பெண்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்களின் வீட்டில் தங்கியிருந்த ஒருவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: