ஆப்கான் தலைநகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் திடீரென தனது உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உள்நுழைந்த தீவிரவாதி அவற்றை வெடிக்கச் செய்ததில் அங்ஞ கல்வி கற்ற 19 மாணவர்கள் உடல் சிதறி பலியாகியதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழகத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. சில மணி நேரங்கள் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் அதில் ஒருவன் வெடிகுண்டுகளை உடலில் கட்டியபடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும் ஏனைய இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments