உடன் அமுலுக்கு வரும் வகையில் கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப்பகுதிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி கேகாலை மாவட்டத்தில் ஹேமதகம,புளத் கொகுபிட்டிய,கலிகம பிரதேசபைக்குட்பட்ட பகுதிகள், மற்றும் கேகாலை மாவட்டத்தில் மதுரங்குள கிராம உத்தியோகத்தர் பிரிவு, கிரியுள்ள பொலிஸ் பிரதேசம் ஆகியவையே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments