பிடிகல-பொரவகம பகுதியில் வசித்து வந்த 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டு பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 11ஆம் திகதி இரவு தனது நண்பருடன் தல்கசவல பிரதேசத்தில் உந்துருளியில் பணித்துக்கொண்டிருந்த போது உந்துருளியை நிறுத்துமாறு காவற்துறையினர் இவர்களுக்கு சைகை காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், காவற்துறையினரின் சமிக்ஞைகளை அலட்சியப்படுத்திவிட்டு இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துள்ளனர்.
இதனைடுத்து குறித்த உந்துருளியின் உரிமையாளரை காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளதையடுத்து மேற்படி மாணவரையும் காவற்துறைக்கு அழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன்போது மாணவரின் தாயும் அந்த சந்தர்ப்பத்தில் காவல் நிலையத்திற்கு வந்திருந்ததோடு குறித்த மாணவரை கடுமையாக திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அவமானம் மற்றும் பயமே குறித்த தற்கொலை சம்பவத்துக்கு காரணமென காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது உயிரிழந்த மாணவரின் பிரேத பரிசோதனைகள் எல்பிடிய மருத்துமனையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments: