மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதை பொருள் விற்பனையாளர்கள் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும் புதிய காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் எனவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். இவர்களிடமிருந்து தலா 6 கிராமும் 400 மில்லிகிராமும், 105 கிராமும் 300 மில்லி கிராமும் ஐஸ் போதை வஸ்த்து மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு டெப் என்பவற்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர். பொலிஸ் அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று(14) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர். இது தெடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments