Home » » மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3959பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- மட்டக்களப்பு அரசாங்க அதிபர்!!

மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3959பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- மட்டக்களப்பு அரசாங்க அதிபர்!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்மட்டக்களப்பு மாவட்டத்தில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3959 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்று என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்களும் இவர்களில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31 பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நிதி திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கலவினால் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிதி மூலம் சனிக்கிழமை முதல் உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகமாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற பகுதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேசமே காணப்படுகின்றது. இங்கு 1335 பேர் தனிமைப்படுத்தலுக்கும் 31 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

அதேவேளை,பட்டிப்பளை பிரதேசத்தில் 11குடுப்பங்களைச் சேர்ந்த 47 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமித்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர் இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர்.

இதற்காக கிழக்கு மாகாண கொரோனா வைரஸ் தடுப்பு இணைப்பாளரான வைத்திய கலாநிதி எம். அச்சுதனின் மேற்பார்வையில் பணிகள் மக்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |