மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த மூவரும், பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த ஒருவர், மாவடிச்சேனை பகுதியை சேர்ந்த ஒருவரும் என ஐவருக்கே இவ்வாறு தொற்று உறுதியானது.
குறித்த நபர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் தொழிலுக்கு சென்றவரும், கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்ப உறுப்பினர்களாவர்.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 40 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 36 பேரும், முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இருவரும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவருக்குமாக கொரோனா தொற்றுக்கு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது
0 Comments