ரீ.எல்.ஜவ்பர்கான்)மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுமார் 140 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உட்பட நாட்டின் கொரோனா பரவியுள்ள மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் கொரோனா தொற்று உருதியானவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 11 போர் இன்று இவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். காத்தான்குடி மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிசாரினால் இவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை கொரோனா பரவியுள்ள இடங்களிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு வருகை தந்து பொலிசாருக்கோ சுகாதார பகுதியினருக்கோ அறிவிக்காது ஒழிந்திருப்போர் தொடர்பிலும் விசேட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments