Advertisement

Responsive Advertisement

சடுதியாக அதிகரிக்கும் கொரோனா - அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

 


இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்தே இந்த தொகை அதிகரித்துள்ளது.

இதேவேளை மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,185 ஆக அதிகரித்துள்ள நிலையில், 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,144 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 4,399 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,244 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை நாட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments