Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடல் தொழிலுக்கு சென்ற ஒருவர் கடலில் மூழ்கி பலி!

 


கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று(31) இடம்பெற்றுள்ளது. நாச்சிக்குடா கடல்ப்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய யோனகன் என்ற 3 மாத குழந்தை ஒன்றின் தந்தையாவார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments