கொழும்பில் அபாயநிலை உள்ளமை வெளிப்படையானதென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் தற்போதைய நிலை தொடர்பில் செய்திளார்கள் வினவிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது. ஆனால் அதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்றைய தினம் பொறளையில் 20 பேரும், கொட்டாஞ்சேனையில் 44 பேரும், மட்டக்குளியில் 36 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறான நிலையை அவதானிக்கும் போது, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், நடமாட்டங்கள் இடம்பெற்றுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தால், இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
இத்தகைய நிலையை கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பும் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றார்.
இதேவேளை தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில், புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கக்கூடிய நிலைமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: