வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் விதமாக, நாடு முழுவதும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் பொலிஸ் திணைக்களம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியவை இணைந்து இவ்விழிப்புணர்வு செயற்திட்டங்களை மட்டக்களப்பில் முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் அதிகமாக கூடும் இடமான பொதுப்போக்குவரத்து இடங்களில் சுகாதார முறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக நாடுமுழுவதும் இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
தற்போது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள பொலிஸ் அதிகாரிகள், இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments