Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சர் விடுத்துள்ள செய்தி...!!

 


இலங்கையில் கொரோனா தொற்று அச்சநிலை காணப்படுகின்ற போதிலும் சமூக தொற்றாக பரவலடையவில்லை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து செயற்படுவதுடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுதந்திர வர்த்தக வலயத்துடன் தொடர்புடைய 930 பேர் நேற்று பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

Post a Comment

0 Comments