பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவரால் பாடசாலை ஆசிரியர் கழுத்து துண்டாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தீவிரவாதி, பொலிசாரின் துரித நடவடிக்கையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தமது பாடசாலை மாணாக்கர்களுக்கு நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்து, பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளானவர் என கூறப்படுகிறது.
பொலிசாரால் கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி, 18 வயதேயான மாஸ்கோவில் பிறந்த செச்சென் இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது அல்லாஹு அக்பர் என கத்தியபடி, அந்த ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் குறித்து பாடம் எடுத்ததோடு, நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களையும் காட்டியிருந்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததால், இவர் ஆத்திரம் கொண்டதாக தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: