Home »
எமது பகுதிச் செய்திகள்
» அம்பாறையில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
அம்பாறையில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
கம்பஹா மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இரு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்தோடு மற்றுமொரு பஸ் நடத்துநரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: