விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் 61 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நேற்று திங்கட்கிழமை (05) முதல் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் ஆர்.ராகல் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பிரதேசமாக கம்பஹா மாவட்டம் உள்ளது. இதனையிட்டு முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக தற்போது விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 61 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளோம்.
இதில் மருத்துவ பீடத்தில் கல்விகற்றுவரும் 16 மாணவர்கள் மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள பல்கலைக்கழக விடுதியிலும் ஏனைய 45 மாணவர்கள் வந்தாறு மூலையிலுள்ள பல்கலைக்கழக விடுதியிலும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments