மட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் (நீரோடையில்) பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி பாலத்திலுள்ள களப்பில் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று மாலை பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனையடுத்து குறித்த சடலம் இன்று காலை கல்லடி டச்பார் வீதியிலுள்ள இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் கரையொதுங்கியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சிவப்பு நிற ரிசேட்டும் நீல நிற டெனிம் ரவுசரும் அணிந்திருந்த சுமார் 30 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணபடாத நிலையில் மீட்கப்பட்டது.
குறித்த சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments