Advertisement

Responsive Advertisement

நோயாளர்களை பார்க்க வைத்தியசாலை செல்வோருக்கு விசேட அறிவித்தல்

 


வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் உள்நோயாளர்களை பார்ப்பதற்காக வெளியிலிருந்து வருபவர்களுக்கு பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.


இதற்கமைய, முகக் கவசங்களை அணிதல், ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை சந்திக்கச் செல்லும் நடவடிக்கையை, முடிந்தளவு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பொருட்களை வழங்கும் சந்தர்ப்பத்தில், அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திக்காது, வேறு வழிகளில் அவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியவசிய வைத்திய தேவைகளுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments