Advertisement

Responsive Advertisement

இரண்டரை வயது பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


கொக்கல பிரதேசத்தில் விடுதி ஒன்றில் அமைக்கபட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த எண்ணூறு பேரில் இதுவரை 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.


மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 204 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் இரண்டரை வயதுடைய பிள்ளையொன்றும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த பிள்ளையின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments