Home »
எமது பகுதிச் செய்திகள்
» மாரவில மீனவருக்கு கொரோனா தொற்று- மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது!!
மாரவில மீனவருக்கு கொரோனா தொற்று- மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது!!
திக்கேவிட்ட மீன்பிடி துறைமுகம் இன்று (10) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆம் திகதி இந்த துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாரவில பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.
5 மீனவர்களுடன் கடலுக்கு சென்ற குறித்த நபர் காய்ச்சல் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் குறித்த 5 மீனவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: