மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணிகளில் இருந்து பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 23 மாவட்டங்களில் இருந்து, 5 ஆயிரத்து 97 நோயாளிகள் - 634 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து எவ்வித தொற்றுக்களும் பதிவாகவில்லை என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments