க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீ்ட்சைத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு தடவைக்கு மேல் தோற்றுபவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் முன்னைய ஆண்டில் 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை குறிப்பிட்ட பாடத்திற்காக மீண்டும் பரீட்சைக்குத் தோற்ற அவசியமில்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான மதிப்பெண் போதுமானது என பரீட்சைத் திணைக்களம் அதில் தெரிவித்துள்ளது
0 Comments