Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் வெடித்த நிலையில் கைக்குண்டு ஒன்றின் மேற்பகுதி மீட்பு

 


பாறுக் ஷிஹான்)

வெடித்த நிலையில் காணி ஒன்றில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றின் மேற்பகுதி மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் -2 பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை(5) காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்களினால் தகவல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன் குண்டு மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு வெற்று குண்டாக காணப்பட்டதுடன் ஏற்கனவே வெடித்திருந்த நிலையில் இருந்ததாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments