பாறுக் ஷிஹான்)அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த நபரொருவர் சாய்ந்தமருதில் வைத்து கைதாகியுள்ளார்.
69 போதை மாத்திரை அடங்கிய பொதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியால் இன்று(8) முற்பகல் சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற கல்முனை பெருங்குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு 69 போதைமாத்திரைகளுடன் கைதானவர் 29 வயதுடையவர் எனவும் அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதை அடங்கிய மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்தியத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த ஆகியோரின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இத்தேடுதலில் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 69 போதை மாத்திரகள், சந்தேக நபர் போதை மாத்திரைகளை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கள் என்பன கல்முனை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 Comments