Advertisement

Responsive Advertisement

அம்பாறை சங்கமன்கண்டி கடற்பகுதியிலிருந்து சுமார் 38 மைல் தூரத்தில் தீப்பற்றிய கப்பலில் 23 பேர் மீட்பு; ஒருவர் காயம்


 இலங்கை கடலோரத்திற்கு அருகே இன்று முற்பகல் தீப்பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பலில் பயணித்த 23 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.


இதன்போது ஒருவர் காயமடைந்திருக்கின்றார். மீட்புப் பணிகளுக்காக விமானப் படையின் ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 270000 மெற்றிக் டொன் எண்ணெய் சுமந்து அம்பாறை சங்கமன்கண்டி கடற்பகுதியிலிருந்து சுமார் 38 மைல் தூரத்தில் இந்தியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த "எம்.டி.நியூ டயமன்"(MT NEW DIAMOND) என்கிற கப்பலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments