வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரசாங்க வேலைத்திட்டத்தில் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் மேல்முறையீடு செய்யுமாறு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் விளக்கமளித்த செயலாளர், தற்போது பணி புரிதல், இபிஎஃப் கணக்கு வைத்திருத்தல் போன்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் அதற்கேற்ப மேல்முறையீடு செய்யலாம் என்று விளக்கினார்.
இந்நிலையில் www.pubad.gov.lk என்ற இணையதளத்தில் மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில் பெறும் பட்டதாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 1 இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments