Advertisement

Responsive Advertisement

கல்வி அமைச்சின் தீர்மானம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ஆலோசனை கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் இவ்வாற திருத்தம் மெற்கொள்ளப்பட்டுள்ளது.

200இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.ர்.ஆ.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments