பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 ஆறு பேர் ஏறாவூர் காவற்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அவர்கள், நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஏறாவூர் காவற்துறை முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேலியகொடை கடல் உணவு விறபனை நிலையத்திற்கு அருகில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர் இம்புல்கொட பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments