Advertisement

Responsive Advertisement

கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள சிக்கல்! சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாராகும் சுதந்திரக்கட்சி

 நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தன்வசம் உள்ள அரசியல் பலத்தை பேரம் பேசலுக்கு உட்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் 15 உறுப்பினர்களை கொண்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற அல்லது அரசியலமைப்புத் திருத்தங்களை செய்ய தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வதில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவு முக்கியமானது.

இவ்வாறான நிலைமையில் தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை கொண்டு பேரம் பேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு யோசனைகளை முன்வைக்க ஏற்கனவே குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments