செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும என அமைச்சு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்றிலிருந்து காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார்.
இந்த கடிதம் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டதாக செயலாளர் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக செயல்படுத்தப்பட்ட திட்டம் அன்றிலிருந்து செயல்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
தற்போது சில பாடசாலைகளில் பிற்பகல் 3.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
0 Comments