Home » » மின் தடை ஏற்படக் காரணமும், பரிகாரமும்

மின் தடை ஏற்படக் காரணமும், பரிகாரமும்

மின் தடை ஏற்படக் காரணமும், பரிகாரமும்



National Grid எனப்படுகின்ற நாடாளவிய மின் விநியோக வலைப்பின்னல் ஒரு centralised ஆன கட்டமைப்பாகும். 

அதாவது நாடெங்கும் உற்பத்தியாகும் மின்சக்தி gridக்கு உள்ளீடு (feed) செய்யப்பட்டு, பின்னர் விநியோகிக்கப்படும். 

இதில் ஏதாவது ஒரு பிரதான விநியோக (distribution) அல்லது உள்ளீட்டுப் (feed) புள்ளியில் பழுது ஏற்பட்டு மின்சக்தி loadஇல் சமமின்மை தோன்றும்போது, grid முற்றாக பழுதடைவதிலிருந்து பாதுகாக்க தன்னை shutdown செய்துகொள்ளும் (failsafe shutdown)  இதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்படும். 


பின்னர் உரிய பழுது அடையாளங்காணப்பட்டு, சரிசெய்யப்பட்டு grid பகுதி பகுதியாக செயற்படுத்தப்படும். இந்த முழுச் செயற்பாட்டுக்கும் பல மணி நேரங்கள் செல்லும். 


இதற்கு முன்னரும் நாம் அறிந்த காலத்தினுள் 3 - 4 தடவைகள் இவ்வாறு நடந்துள்ளது. 


Grid மிகவும் பழய உபகரணங்களைக் கொண்டிருப்பது, நாடளாவிய ரீதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மின் பாவனை, gridஇல் இணைக்கப்படுள்ள தொகுதிகளின் பராமரிப்புக் குறைபாடுகள் மற்றும் சில வேளைகளில் உள்ளக சதிநாச வேலைகளும் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. 

தற்போது ஏற்பட்டிருக்கும் grid failureக்கு கெரவலப்பிட்டிய மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் குறைபாடே காரணம் என மின்சக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிதாக பதவிபிரமானம் செய்து இரண்டு நாளிளே நாடு பூராகவும் கரண்டு இல்லாம போச்சே #மின்சக்தி_அமைச்சரே #டளஸ்_அழகபெரும எப்பயை வரும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |