தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (செவ்வாக்கிழமை) மட்டக்களப்பு கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவீரர் குடும்பங்களின் இணைப்பாளர் எஸ்.குமரேசன், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார் வைத்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ் அவர்களின் முயற்சியினால் புதிதாக கட்டிக் கொடுக்கப்படவுள்ள இவ்வீட்டுக்குரி அடிக்கல் நடும் நிகழ்வில் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments