மேலும் பத்தாயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புவழங்குவதற்கு இன்று கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று ஜனாதிபதியின் தலைமையில் கூடியது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
17 ஆம் திகதி வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
0 Comments