Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

களத்தில் நின்று இனவாதத்திற்கெதிராக போராடுகின்றவர்கள் நாங்கள் மாத்திரம்தான்-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

 

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 


மட்டக்களப்பில் 24 மணித்தியாலமும் கிழக்கு தமிழ் மக்களின் இருப்புக்காக களத்தில் நின்று இனவாதத்திற்கெதிராக போராடுகின்றவர்கள் நாங்கள் மாத்திரம்தான் என தபால் சேவைகள் வெகுசன ஊடக தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரள தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள காயான்மடு கிராமத்தில் கொங்கிறீட் வீதிக்கான ஆரம்பகட்ட பணிகள் தபால் சேவைகள் வெகுசன ஊடக தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரளால் செவ்வாய்க்கிழமை (18.08.2020) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி அமைக்கப்படவுள்ளது.

காயான்மடு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கே. தேவரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸாந்த உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments