அரச பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுவது பொது தேர்தலுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சில பாடசாலைகள் தேர்தலுக்கு வாக்குச் சாவடிகளாக பயன்படுத்த தயாராக இருப்பதன் காரணமாக அவற்றை மீள திறக்க முடியாது என கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, அரச பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்படும்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments