Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாக்களிக்கச் சென்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

மாதம்​பே - பம்பல பிரதேசத்தில் தபால்மூல வாக்குப்பதிவுக்காக சென்று கொண்டிருந்த ஆசிரியையின் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் தொடர்பில் விசார​ணைகளை முன்னெடுத்து வருவதாக, மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியையின் தங்க நகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.


மேற்படி ஆசிரியை, பம்பல பகுதியில் அமைந்துள்ள கோட்டக் கல்வி காரியாலயத்துக்கு, வாக்களிப்பதற்காக நடந்து சென்ற போதே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments