அங்குலான – லுணாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாகவே இன்று அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்ற நிலைமையினை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் கூடிய சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் கூடியவர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
கடந்த 10 ஆம் திகதி இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அமித் கருணாரத்ன என்ற நபரின் மரணம் தொடர்பான விசாரணை இன்று மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மரணத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்யாமை மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்து ஆத்திரமடைந்துள்ள பிரதேச மக்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments: