Advertisement

Responsive Advertisement

கொக்கரிக்கின்ற கோடிஸ்வரன் வரலாறு தெரியாதவர் - கருணா அம்மான்

எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
அம்பாறை மாவட்டத்தில் கொக்கரிக்கின்ற கோடிஸ்வரன் ஏன் தமது மாவட்டத்தின் மக்களை கண் திறந்து பார்க்க முடியாமல் உள்ளார். அவருக்கு நான் இன்று பெற்றுக்கொடுத்துள்ள சமாதானத்தினால் தான் இந்தளவு மேடைகளில் நின்று குரல்கொடுக்கக்கூடியதாக உள்ளது. அவ்வாறு அல்லாமல் இருந்தால் அவர்களுக்கு கத்துவதற்கு குரல் இல்லாமல் இருந்திருக்கும். இந்த வரலாறுகளை மறந்து கதைப்பதை நிறுத்தவேண்டும் கோடிஸ்வரன்.

கருணா அம்மான் அம்பாறையில் தமிழ் வாக்குகளை சிதறடிக்க வைப்பதற்காகவே இங்கு வந்து போட்டியிடுகின்றார் என்றும் தனது வாக்கை தனக்கு அளிக்கமுடியாத கருணா அம்மான் என்று எல்லாம் விமர்சனங்கள் வருகின்றது. இதுக்கொல்லாம் அஞ்சமாட்டேன் நான். மக்களின் அபிவிருத்தி பணியை தொடர்ந்து முன்னெடுப்பேன்.

நான் வேறுமனே வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றுபவன் அல்ல, தேர்தல் காலங்களில் உணர்வுள்ள தமிழன் போன்று உணச்சியை கக்கித்திரியும் கூட்டம் அல்ல, மக்களுக்கு சொல்வதை செய்வதற்கான ஆணையை மக்கள் தருவார்களாயின் நான் மக்களின் தேவையுனர்ந்து செயற்படுவேன் என தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசேட செவ்வியில் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments