Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் - பந்துல

அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், பந்துல குணவர்த்தன, இன்று(16) இதனை தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டடி நடத்தப்படும் என்று அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments