வடக்கு கிழக்கில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற அரசசேவையாளர்களுக்காகன தபால்மூலமான வாக்களிப்பில் அரசசேவையாளர்கள் மீனுக்கு தங்களது ஆதரவுக்கரத்தினை நீட்டியுள்ளனர் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பாக தபால் மூலம் வாக்களித்த அரச சேவையாளர்கள் கருத்து வெளியிடுகையில் வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின்மீது மக்கள் விரக்தியில் உள்ளனர் என்பதுடன் அதனால் ஒரு மாற்றம் வேண்டும் மாற்றத்துக்கான புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் தெளிவாக உள்ளதாகவும் மாற்றத்துக்கான தலைமையாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை மக்கள் தெரிவு செய்ய உள்ளதாகவும் கடந்தகாலத்தில் மேற்கொண்ட தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளாலும், தமிழ்த் தேசிய நீக்க அரசியலாலும், அண்மைய உள்முரண்பாடுகளாலும் மக்கள் கூட்டமைப்பினை நிராகரிக்க முடிவு செய்துள்ளனர் என்பதுடன் நடந்து முடிந்துள்ள தபால் மூலமான வாக்களிப்பு மீன் சின்னத்தின் வெற்றிக்கு அட்சாரமாகக் கொள்ளப்படுகின்றது என அவர்கள் தெரிவித்தனர்.
0 comments: