பொதுத் தேர்தல் முடிவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது
கொரோனா வைரசுக்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் late city edition இன் முதல் பக்கத்தில் தெரிவித்துள்ளது
சுகாதார அமைச்சு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வரை பாடசாலைகளை மூடிவைத்திருக்குமாறு கல்வியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது என தகவல் கிடைத்துள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்கள் முடியும் போது, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு கருதுவதாகவும் டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று மேற்கொள்ளும் எனவும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
0 Comments