Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் ஒத்திவைப்பு

ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சில பரீட்சைகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை 2017 (2020), அதிபர் சேவையின் இரண்டாம் தர அதிகாரிகளுக்கான தடைதாண்டல் பரீட்சை 2019 (2020) உள்ளிட்ட சில பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments