இலங்கையில் தனிப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் வரலாறு காணாத வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதில் மக்கள் வங்கியே மிக குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்க முன்வந்துள்ளது.
10 வருடங்கள் வரை மீள் செலுத்தும் காலங்களை கொண்ட கடன்களுக்கு 9% வட்டியில் இன்று முதல் கடன்கள் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர் மக்கள் வங்கியினர்.
ஏற்கனவே வேறு வங்கியில் கடன் எடுத்தவர்கள் அந்த வங்கியுடன் தொடர்புகொண்டு தங்கள் கடன்களை மீள் நிரப்பிக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும்.
3,5,7,10 வரையான ஆண்டுகளில் திருப்பிச்செலுத்தும் நடைமுறை உள்ள நிலையில் மக்கள் வங்கி (Peoples bank)மற்றும் இலங்கை வங்கியில்( BOC)ஆகக்குறைந்த வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த சந்தர்ப்பத்தினை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென நிதி ஆலோசனை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
0 Comments