இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் காரியாலயங்களின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும்போது, அன்றாட இயல்பு நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார நடைமுறைகளை முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பின்பற்றுமாறு அனைத்து தரப்பினரிடமும் அரசாங்கம் கோரியுள்ளது.
இதேவேளை, தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தேசிய மிருகக்காட்சி சாலையின் மூலம், வருடம் ஒன்றிற்கு திறைசேரிக்கு சுமார் 7 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கின்ற நிலையில், தற்போது அது மூடப்பட்டுள்ளமையினால் திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தேசிய மிருகக்காட்சி சாலை, தேசிய பூங்காக்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் எஸ்.எம்.சந்தரசேன குறிப்பிட்டுள்ளார்

0 comments: