Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் - டலஸ் அலகபெரும

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயர்தர பரீட்சையை சில வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு மாணவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் உயர்தர பரீட்சை இடம்பெறும் திகதி தீர்மானிக்கப்படும்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments