ஸ்ரீலங்காவில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவும் ஆபத்து தென்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொதுமக்களின் நலன் கருதி தளர்த்தப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் பொதுமக்கள் சுகாதார விதிமறைகளையும், கொரோனா வைரஸ் தாக்கத்தையும் மறந்து செயற்படுவதால் மேலும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
முடிந்து விட்டது என்று கங்கணம் கட்டிய வல்லரசு நாடுகளில் கூட இத்தொற்று கோரத்தாண்டவம் ஆடுகிறது. ஆகையால் பொதுமக்களை உரிய சுகாதார முறைகளின் படி செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments