Home » » கல்முனை பொலிஸ்நிலைய அதிகாரிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகள் வழங்கிவைப்பு.

கல்முனை பொலிஸ்நிலைய அதிகாரிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகள் வழங்கிவைப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
சுகாதார அமைச்சின் அனுமதியோடு நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை ஏற்பாடு செய்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இம்முனோ வூஸ்டர் (IMMUNO BOOSTER) எனும் ஆயுர்வேத பானம் மற்றும் மாத்திரைகளை இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு (12.06.2020) கல்முனை பொலிஸ் நிலைய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்தவிடம் கையளித்தார்.

நிகழ்வில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு வைத்திய பணிப்பாளர் விளக்கமளிக்கும் போது, இந்த ஆயுர்வேத மருந்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தக் கூடியது. எவ்வித பக்க விளைவுகளும் அற்றதாகும்.

தற்போது நாட்டில் பரவியுள்ள COVID 19 கொரோனா தோற்று நோயை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விசேடமாக தயாரிக்கப்பட்டதாகும். சாதரண இளம் சூடான நீரில் கலந்து தேரனீருடன் கலந்து அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று தெரிவித்தார்

இந்த நிகழ்வில் கல்முனை கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் , சுற்றாடல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எஸ்.எல்;.சம்சுதீன் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |